கனம்
தகுதியில் கனம் குறையும்போதுதான், தலையில் கனம் ஏறுகிறது.
ரௌத்திரம் பழகு!
கோபப்படுவது எளிது. ஆனால், சரியான காரணத்துக்காக, சரியான நபர் மீது, சரியான நேரத்தில் கோபப்படுவது.. அத்தனை எளிதல்ல!
சிறுசு, பெருசு!
சின்ன வேலைகளில் பெரிய திறமையைக் காட்டுபவர்களுக்குத்தான் பெரிய பொறுப்புகள் தேடி வருகின்றன.
கொஞ்சம் இளைப்பாற..
வெற்றி என்பது எல்லை அல்ல.. பயணத்தின்போது இளைப்பாறும் இடம்!
சிந்தனை ஏர்!
கற்ற கல்வியை செயல்முறைப் படுத்தாதவனும், நிலத்தை உழுதுவிட்டுப் பயிரிடாதவனும் ஒன்று!
பேசுறாங்க..!
அறிவாளிகள் பேசுகிறார்கள்; காரணம், அவர்களிடம் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. முட்டாள்கள் பேசுகிறார்கள்; காரணம், அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டிஇருக்கிறது!
அவநம்பிக்கை
உன்னால் எதுவும் செய்ய முடியாது - உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று நீ நம்புகிற வரை!
திருப்தி!
திருப்தி என்பது நீங்கள் விரும்புவதை அடைவதில் இல்லை; அடைந்ததை விரும்புவதில் உள்ளது!
எப்படி.. அப்படி..!
தோல்வியை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான், வெற்றியை நீங்கள் எப்படி அடையப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.
அழகு
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது. தங்களைச் சரியாக அலங்கரித்துக் கொள்ளத் தெரியாத பெண்கள்தான் இருக்கிறார்கள்!
நன்றி: அவள் விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment